தாயெனும் கோயில்.



அன்னை உந்தன் கண்ணில்தானே
அன்பின் தெய்வம் கண்டேன்
ஆசை முத்தம் தந்தபோது
அகிலந் தன்னை வென்றேன்.



உந்தன் கரங்கள் என்னைத்தழுவ
உணர்வின் இனிமை வியந்தேன்
தந்தபாலில் தமிழைப் பருகித்
தமிழால் இன்று உயர்ந்தேன்.



எந்தன் விழிகள் தூங்கும்போது
அருகே யமர்ந்து ரசித்திருந்தாய்
எந்தன் விரல்கள் அசையும்போது
எறும்போ ஈயோ எனத்தவித்தாய்.



கண்ணை விழிக்கும் போதுஎதிரில்
கமலம் போலே சிரித்திருந்தாய்
விண்ணி லிருந்து கண்ணன்வந்தான்
வீட்டுக் கென்றே மகிழ்ந்திருந்தாய்.



அன்னை இன்றென் அருகிலில்லை
அதனால் மனசு கொதிக்கிறது
உன்னனைத் தானே தெய்வமென்று
உள்ளக் கோயில் துதிக்கிறது.



கந்தவனம் கோணேஸ்வரன்
11.05.2020


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5