காதல்வானிலே…

காதல்வானிலே…


நிலவின் குளிரைக் கண்களில் வைத்தாய்
மலரின் அழகை வதனத்திற் கொண்டாய்.

உலவும் காற்றில் உணர்வைக் கலந்தாய்
உயிர்க்கும் மொழியில் அன்பைக் கரைத்தாய்.

தழுவும் போதொரு பனிமுகி லானாய்
பழகும் வேளையில் பைந்தமிழ் தந்தாய்.

இளைய மகளே எந்தன் உயிரே
வளையல் குலுங்கும் வனிதையர் திருவே.

காதல் வானில் கவிதைச் சிறகொடு
தீதில் உலகம் காண்போம் வாராய்.



கந்தவனம் கோணேஸ்வரன்.
10.05.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5