கானல்நீர்.

கானல்நீர்.


கானல்நீரைத் தேடித்தானே வாழ்க்கை போகுது
கடைசியிலே அதுவுங்கூடக் கானல் ஆகுது
ஈனச்செயல்கள் செய்துவாழ்வில் உயரத் தோன்றுது
எல்லாம்நிறைந்த பின்னும்வாழ்க்கை சலித்துப் போகுது


இளமையிலே காதல்தானே உலகம் ஆகுது
இதிலேதோல்வி காணும்போது இதயம் கனக்குது
அழகினிலும் பகட்டினிலும் ஆசை கொள்ளுது
அத்தனையும் கிடைத்தபிறகும் துயரம் நீளுது.


அமைதிநெறி நாடுவோர்க்கு உலகம் இனிக்குது
ஆதிதொடக்கம் அந்தம்வரைக்கும் உறவு நிலைக்குது
இமயம்போல அவர்தம்புகழை வையம் போற்றுது
இல்லையென்ற போனவரை ஏற்க மறுக்குது.



கந்தவனம் கோணேஸ்வரன்.
05.03.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5