பச்சை வயலோரம்.

பச்சை வயலோரம்.

..
பச்சை வயலோரம் பாக்காமப் போறபெண்ணே
பாசத்த நெஞ்சில்வச்சுப் பக்குவமாய்ப் போறதென்ன?

இச்சைக் கிளியாக ஏங்குகிறேன் மச்சான்நான்
என்ன நெனச்சுஒரு சேதிசொல்லிப் போகாயோ

ஆத்தா மறுத்தாளா அப்பனெனை வெறுத்தாரா
சேத்துவய மாப்பிள்ளையச் சேர்க்க மறுத்தாரா?

எந்தன் மனசுக்குள்ள உன்கோயில் உள்ளதடி
எந்தன் குலதெய்வம் நீயென்று மானதடி

எந்த எதிர்ப்புனக்கு வந்தாலும் கலங்காதே
உன்னை மீட்பதற்கு மச்சான்நான் காத்திருக்கேன்
.

கந்தவனம் கோணேஸ்வரன்
21.02.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5