நிலவின் ஒளியில் மங்கையுன் வதனம்.

நிலவின் ஒளியில் மங்கையுன் வதனம்.


நிலவின் ஒளியில் மங்கையுன் வதனம்
மலரும் நாணும் மகிமை யுறுதே

உலவும் காற்றில் அசையுங் கூந்தல்
விலகு மஞ்சின் கோலம் பெறுதே

விழிகள் இரண்டும் விண்மீன் உறவோ?
அழகிய பற்கள் அலைதரு முத்தோ?

கனியிதழ் என்ன பனித்துளி விரிப்போ?
காவியம் படைத்திடும் கவிதரு சிறப்போ?

உலகிடை யசையும் உயிர்பெறு நிலவோ?
நிலமகள் வியந்திட என்வசம் வருமோ?


கந்தவனம் கோணேஸ்வரன்.

01.02.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5