மனிதம் காப்போம்.

மனிதம் காப்போம்.

மதத்தின் பேரால் இனத்தின் பேரால்
மனிதனை மனிதன் அழிப்பது சரியோ?

கருத்தின் பேரால் கட்சியின் பேரால்
மிருகம் போன்று நடப்பதும் ஏனோ?

சாதியின் பேரால் காதலைப் பிரித்து
சாதனைக் கொலைகள் புரிதலும் முறையோ?

நீதியை மறந்து நேர்மையை இழந்து
ஆதிக் குணங்கள் கொள்வது நலமோ?

உயிரை வதைக்கும் உணர்வை வதைப்போம்
உலகம் ஏற்கும் வழியில் நடப்போம்.

கந்தவனம் கோணேஸ்வரன்
06.03.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5