மலரே…மௌனம் ஏன்?

மலரே…மௌனம் ஏன்?

உன்னைக் கண்டேன் உவகை கொண்டேன்
என்னைத் தந்தேன் இதயம் மகிழ்ந்தேன்.

பதற்றம் ஏனோ பாவாய் உன்றன்
உதட்டை அசைத்து ஒருசொல் கூறாய்.

பார்த்த விழிகள் பனித்து நின்றன
யாத்த கவிதை தனித்து நொந்தது.

ஏக்கம் தானோ எனக்கு நீதி?
நோக்கம் என்ன கூறடி தேவி.

மலரே மலரே மௌனம் ஏனோ?
புலரும் காதல் துயரம் தானோ?

கந்தவனம் கோணேஸ்வரன்
19.12.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5