பேரழகிப் பெண்ணிவளோ.

பேரழகிப் பெண்ணிவளோ.

கூந்தல் அந்தக் கார்முகிலின் தங்கையாமோ
சேர்ந்த முகம் சிரித்திருக்கும் திங்களாமோ

மைவிழிகள் உரைப்பதெலாம் இனிய பொய்களோ
மரகதங்கள் போட்டுவைத்த முத்துப் பைகளோ

கைவிரல்கள் காந்தள் கொண்ட மெல்லிதழாமோ
செவ்விதழ்கள் கோவை தந்த செந்நிறமாமோ

நூலிழையும் நாணுமிடை நினது என்பனோ
காலளந்த பூமிபனிக் குழம்பு என்பனோ

விண்ணை விட்டுப் பூமிவந்த வெண்ணிலவோ
கண்ணை யீர்க்கும் பேரழகுப் பெண்ணிவளோ?

கந்தவனம் கோணேஸ்வரன்.
30.12.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5