குறளோடு கவிபாடு.

 குறள்வெண் செந்துறை. (திங்கள் கவிதை)

குறளோடு கவிபாடு. (சிறப்புச் சான்றிதழ் பெற்றது)


பிறரை வருத்திப் பெறுவது யாதோ
உறவை வளர்த்தல் உறுதுணை யாமே.

நல்லன செய்யின் நலமே விளையும்
அல்லன ஆற்றின் அறங்கூற் றாமே.

உயிர்த்துணை யாதல் இரங்குதல் என்பன
மயிர்த்துணை யேனும் மாணப் பெரிதே.

வரன்முறை மீறா வாழ்க்கை யமைத்து
அரன்நெறி காத்தல் அனைத்துயிர் கடனே

இறையை நினைத்து இனிதே வாழ்ந்தால்
கறையே இல்லாக் களிப்பு வருமே.

கந்தவனம் கோணேஸ்வரன்
20.01.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5