என்றும் எங்கும் தமிழ்.

அமுதமழைக் கவிக்களஞ்சியம்.
செந்தமிழ்ச் செவ்வாய். 
என்றும் எங்கும் தமிழ்.  (சான்றிதழ் பெற்றது)


என்றும் எங்கும் தமிழே யானால்
இதயம் நிறைந்த மகிழ்ச்சி பிறக்கும்
குன்றின் மேலொரு தீபம் போலக்
குவலயம் முழுதும் தமிழே சிறக்கும்.

வையம் தந்த மூத்த மொழியாள்
வயதே யாகினும் இளமை எழிலாள்
செய்ய திருப்போல் வளமும் உடையாள்
சின்னக் குழந்தை போலெழில் நடையாள்.

அறிவியல் கணினி அகம்புறம் பக்தி
அனைத்துத் துறையிலும் வலிய லானாள்
நெறியாய்த் தமிழைப் போற்றி யாமும்
நிலமிசை வாழ்ந்து நிறைபுகழ் பெறுவோம்.


கந்தவனம் கோணேஸ்வரன்
01.01.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5