மரங்களைப் போற்று.

மரங்களைப் போற்று.

காற்றை மாசு படுத்தும் மனிதா
காசைக் கொடுத்தால் காற்று வருமா?
நேற்று நிமிர்ந்த நிழல்மரங் களைநீ
நிலத்திற் கிடத்திப் பலகை செய்தாய்.
சோற்றைக் கூடச் செய்யாக் காசு
சொகுசு தந்திடும் என்றா நினைத்தாய்?


இயற்கை சிதைந்து சேரும் பணத்தில்
எவர்க்கும் புவியில் பசியா றாது
செயற்கை தந்திடும் அழகு கூட
இயற்கை சிதைந்தால் நிலையா காது.
உயர்வு உனக்கு வேண்டு மென்றால்
உயிராய் மரங்களைப் போற்றிடு வாயே.

கந்தவனம் கோணேஸ்வரன்.

21.12.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5