இதயமுள்

நிலாமுற்றம்  (தலைப்புக் கவிதை) (சான்றிதழ் பெற்றது)


இதயமுள்

.
எத்தனை பதுங்கல் எத்தனை குமுறல்
எத்துணைப் பஞ்சம் எத்துணைப் பதற்றம்
எத்துணைக் கண்ணீர் எத்துணைக் கவலை
அத்துணை கடந்தும் ஆறுதல் இலையே.


சிந்திய செந்நீர் சிதறிய உடலம்
வெந்திடும் தாயரின் விம்மல் கதறல்
பிந்தையர் வாழ்ந்திடப் பேருயி ரிழப்பு
சிந்தையில் வருகையில் துடிக்குது மனமே.


வாழ்ந்திட வேண்டி வழிமுறை தேர்ந்தோம்
வாழ்ந்திட லின்றி வீழ்ந்திட லானோம்
சூழ்ந்திடு துயரம் தொடர்கதை யாமோ
வீழ்ந்தவர் மீண்டும் நிமிர்வது மிலையோ


நெஞ்சம் துடிக்குது நெருஞ்சி பூக்குது
பிஞ்சுகள் முகத்தைப் பார்க்கவும் கூசுது
பஞ்சையாய்ப் பாரில் உலவிடும் காலம்
அஞ்சி விலகிடும் நாளென் னாளோ?


கந்தவனம் கோணேஸ்வரன்
16.12.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5