எங்கள் திருக்கோணமலை 20

எங்கள் திருக்கோணமலை 20


செந்நெல் விளைந்திருக்க
 செங்கருப்பஞ் சாறிருக்க
என்ன குறையெமக்கு
 எனத்தமிழர் வாழ்ந்தமண்
வண்ணமிகு ஊர்நடுவே
 வளமார்ந்த தமிழ்காக்க
என்னப்பன் கோணேசர்
 அமர்ந்திருக்கும் தமிழர்மண்.


ஊரெல்லாம் வயற்காடு
 உறவெல்லாம் செழிப்போடு
ஏரோசை தினம்முழங்கும்
 எங்களுயிர்த் தாயகமண்
சீரான வாழ்வியலும்
 சிவநெறியும் நடைமுறையும்
ஊரோடு சேர்ந்தியங்கும்
 ஓற்றுமையை வளர்த்தமண்.


பாவலர்வாய்ப் பைந்தமிழும்
 பல்துறைதேர் கலைஞர்களும்
மேவியுயர்ந் தோங்கிநிற்கும்
 வீரமுடை மறவர்மண்
கோவிலொடு மரபுகளும்
 குலம்விளங்கும் வழமைகளும்
காவியங்கள் எனஇனிக்கும்
 கனிதம்பல கமத்துமண்.


கந்தவனம் கோணேஸ்வரன்.

08.11.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5