எங்கள் திருக்கோணமலை 18.
எங்கள் திருக்கோணமலை 18.
காதல்மொழி பேசுகின்ற கன்னியர்கள் ஓர்புறம்
கண்ணசைவில் தமையிழக்கும் காளையர்கள் ஓர்புறம்
வேதவொலி பரப்புகின்ற அந்தணர்கள் ஓர்புறம்
வேளைக்குச் சோறிடுநல் உழவர்கள் ஒர்புறம்
தீதறியாக் கல்விபெறும் மாணவர்கள் ஓர்புறம்
தீந்தமிழை ஆய்ந்துணரும் அறிஞர்குழாம் ஓர்புறம்
மோதுமலை கண்டுமகிழ் கோணேசர் அமர்ந்திருக்கும்
மேன்மைமிகு திருக்கோண மலையெங்கள் பேர்அறம்.
நீண்டு பரந்திருக்கும் வளமான வயல்நிலங்கள்
நெல்மணியாய் அதைமாற்றித் தருகின்ற நற்கரங்கள்
யாண்டும் குறைவில்லா தமைகின்ற கடல்வளங்கள்
யாவர்க்கும் உணவாகும் சுவையுள்ள மீனினங்கள்
வேண்டும் பொழுதெல்லாம் துணைநிற்கும் நன்மனங்கள்
வேதனைக்கும் சோதனைக்கும் கைகொடுக்கும் வலுக்கரங்கள்
மீண்டும் நிலைபெறுவோம் எனவார்க்கும் இதயங்கள்
மேன்மைமிகு திருக்கோண மலைதந்த நல்வளங்கள்.
அறிவியலும் மெய்யியலும் இணைந்தோங்கி வளரும்
அழகுதமிழ்க் கலைகளிங்கு தினம்புதிதாய் மலரும்
நெறிதவறா வாழ்முறையால் தமிழர்நிலை உயரும்
நிலைத்துநிற்கும் காவியங்கள் இங்குபல தோன்றும்
உறுதிபெறும் வகைமாந்தர் உள்ளங்கள் பெருகும்
உழைப்பாளர் முயற்சிகண்டு உலர்மண்ணும் உருகும்
மறைபுகழும் மாதுமையும் கோணேச ருமமர்ந்த
மேன்மைமிகு திருக்கோண மலைபுகழால் நிறையும்.
கந்தவனம் கோணேஸ்வரன்,
ஐப்பசி, 2013

கருத்துகள்
கருத்துரையிடுக