வெருகற்பத்து 08- வேலன் வருகிகிறான்.....
வேலன் வருகிறான்..
வேலன் வருகிறான் எங்கள் வேலன் வருகிறான்வெருகலாற் றங்கரை யமர்ந்த வேலன் வருகிறான்
பாலன் வருகிறான் எங்கள் பாலன் வருகிறான்
பார்வதியாள் மைந்தன் தேரில் ஏறி வருகிறான்.
(வேலன் வருகிறான்….)
நீலமயில் ஏறி எங்கள் வேலன் வருகிறான்
நீண்டதுயர் போக்கச் சித்திர வேலன் வருகிறான்
ஆலம்பொந்தில் அமர்ந்த தமிழ்த் தேவன் வருகிறான்
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் வருகிறான்.
(வேலன் வருகிறான்…)
தேவயானை கொண்ட தெய்வ முருகன் வருகிறான்
தெள்ளுதமிழ் காத்த தமிழ்ச் சிறுவன் வருகிறான்
ஆவலோடு அருக மர்ந்து வள்ளி வருகிறாள்
அழகன்முருகன் குமரன் எங்கள் நேசன் வருகிறான்.
(வேலன் வருகிறான்..)
வேலெடுத்துப் பகை முடிக்க வேலன் வருகிறான்
வேதங்களின் உருவ மான ஈசன் வருகிறான்
நாவெடுத்து அவன் பெயரை உரக்கச் சொல்லுவோம்
நாதனவன் பெயரைச் சொல்லி உலகை வெல்லுவோம்.
(வேலன் வருகிறான்)
கருத்துகள்
கருத்துரையிடுக