வெருகற்பத்து 04- வெற்றி முருகன்.....
வெற்றி முருகன்...
வெற்றித்திரு முருகனுக்கு அரகரோகராவேலெடுத்த குமரனுக்கு அரகரோகரா
சுற்றிப்பகை வென்றவற்கு அரகரோகரா
சூரனைவ தைத்தவர்க்கு அரகரோகரா.
தெய்வயானை அழகனுக்கு அரகரோகரா
தினைக்குறத்தி நாயகர்க்கு அரகரோகரா
பொய்யிலாத தெய்வத்துக்கு அரகரோகரா
பொதிகைத்தமிழ்க் கடவுளுக்கு அரகரோகரா
தந்தைக்குக்குரு வானவர்க்கு அரகரோகரா
தமிழைக்காக்கும் கந்தனுக்கு அரகரோகரா
சிந்தையிலே நிறைந்தவர்க்கு அரகரோகரா
சித்திரவே லாயுதற்கு அரகரோகரா.
ஆலம்பொந்தில் அமர்ந்தவர்க்கு அரகரோகரா
ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா
கோலமயில் ஏறினோற்கு அரகரோகரா
குழந்தைவேலன் முருகனுக்கு அரகரோகரா
கருத்துகள்
கருத்துரையிடுக