வெருகற் பத்து 03- மால் மருகன்...
மால் மருகன்..
வெருகலம் பதியில் அமர்ந்தருள் புரியும்
வேலவன் தாள் பணிந்தோமே
உருகிடும் அடியார் உளங்களில் நிறைவாய்
உறைந்திடும் மால் மருகோனே
பொறியெனப் பிறந்தாய் பூவினில் மலர்ந்தாய்
பிரணவப் பொருள்தனை உரைத்தவனே
அசுரனை வதைத்தாய் தேவரைக் காத்தாய்
அறுமுகம் கொண்ட இளையவனே
கார்த்திகைப் பெண்களின் கரங்களில் தவழ்ந்தாய்
கலியுகம் காத்திடப் பிறந்தவனே
கீர்த்தியு டன்வெரு கலம்பதி யமர்ந்தாய்
கங்கா தரன்மக வானவனே
சித்தர வேலா யுதனே குகனே
சீர்மிகு இளமைத் திருவுருவே
வித்தகர் போற்றும் குருவே எங்கள்
வினை யறுத்திடநீ வருவாயே.
கருத்துகள்
கருத்துரையிடுக