நெருப்பாற்றில் நீந்த விட்டாய்.

நெருப்பாற்றில் நீந்த விட்டாய்.


நெருப்பாற்றில் நீந்த விட்டாய் கண்ணே
நேர்தந்த பார்வை கொன்றாய் பெண்ணே

செருக்கோடு உதறிச் சென்றாய் அன்பை
சீரிழந்து தவிக்க வைத்தாய் என்னை

நினைவெல்லாம் நின்றாடும் தேவி நீயே
நீயில்லா வாழ்வினிலே எல்லாம் தீயே

உணவேது உணர்வேது உயிரே மிச்சம்
உடலோய்ந்து போகுமடி வேண்டாம் அச்சம்

நிலையாகா உடலமிது மறைந்து போகும்
குலையாத உறுதியுடன் காதல் வாழும்.


கந்தவனம் கோணேஸ்வரன்
05.02.2020.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09