மன்னவன் வந்தானடி..

மன்னவன் வந்தானடி..

இதழில் தேன்துளி பருகிட
இதயம் மகிழ்ந்து தழுவிடக்
கதைகள் சொல்லி மகிழ்ந்திடக்
காலம் முழுதும் களித்திட,

உதய வானின் நிலவென
உள்ளம் போற்றும் உறவென
விதியை வெல்லுந் துணையென
விரைந்தே என்னவன் வந்திட,

விழிகள் விரைந்து போரிட
விரல்கள் நுழைந்து தளமிடப்
பரவுந் தேக உணர்வினிற்
பாரை மறைத்துப் புதைத்திட,


எரியும் மேனி குளிர்ந்திட
ஏக்கங் குறைந்து தணிந்திடப்
புரியும் வகையிற் புரிந்திடப்
புதுப்புதுக் கலைகள் தொடர்ந்திட,

கன்னக் கதுப்பினிற் கவிசொலக்
காவியம் படைத்துளங் களிப்புற
மன்னவன் வந்தான் அடிதோழி
மகிழ்ந்தேன் அவனுள் எனைத்தேடி.

கந்தவனம் கோணேஸ்வரன்
10.02.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5