இன்பத் தமிழென்றே முழக்கம் செய்வோம்
இன்பத் தமிழென்றே முழக்கம் செய்வோம்
.
என்று பிறந்தனள் என்றெவர் அறியா
தின்று பிறந்தவள் போலெழில் உருவினள்
ஆதி இலக்கணம் அகத்தியம் கண்டவள்
நீதி அகப்புற இலக்கியம் தந்தவள்
வணிகம் கண்டவள் வழ்வியல் கொண்டவள்
கணிதக் கலையின் கரைதனைத் தொட்டவள்
பக்திச் சுவைக்குப் பாவிருந் தளித்தவள்
பற்பல சிற்பச் சாத்திரம் அறிந்தவள்
இன்றுங் கணினியில் ஆட்சி புரிபவள்
என்றும் பட்டி மன்றம் ஆள்பவள்
அன்னைத் தமிழே நின்னை என்றும்
இன்பத் தமிழென முழங்குதல் செய்வோம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
07.01.2020
.
என்று பிறந்தனள் என்றெவர் அறியா
தின்று பிறந்தவள் போலெழில் உருவினள்
ஆதி இலக்கணம் அகத்தியம் கண்டவள்
நீதி அகப்புற இலக்கியம் தந்தவள்
வணிகம் கண்டவள் வழ்வியல் கொண்டவள்
கணிதக் கலையின் கரைதனைத் தொட்டவள்
பக்திச் சுவைக்குப் பாவிருந் தளித்தவள்
பற்பல சிற்பச் சாத்திரம் அறிந்தவள்
இன்றுங் கணினியில் ஆட்சி புரிபவள்
என்றும் பட்டி மன்றம் ஆள்பவள்
அன்னைத் தமிழே நின்னை என்றும்
இன்பத் தமிழென முழங்குதல் செய்வோம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
07.01.2020
கருத்துகள்
கருத்துரையிடுக