திருக்கோணேஸ்வரம்.
திருக்கோணேஸ்வரம்.
இலங்கையிலுள்ள சிவாலயங்களுள் மிகவும் தொன்மையானதும் முதன்மையானதும் என்ற சிறப்புடையது திருக்கோணேஸ்வரம். இது இயற்கை எழில் நிறைந்ததும் உலகின் மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் அமைந்ததுமான திருக்கோணமலை பட்டினத்தில் அமைந்துள்ளது. முப்புறமும் கடல் சூழ்ந்த திருக்கோணமலை நகரத்தில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வர ஆலயமும் முப்புறமும் கடல் சூழ்ந்த குன்றில் காணப்படுவது பெருஞ்சிறப்பாகும். இவ்வாலயத்தில் அமைந்துள்ள இறைவன் கோணேஸ்வரர் என்றும் இறைவி மாதுமையம்பாள் என்றும் அழைக்கப்படுகினறனர். இவ்வாலயத்தின் தீர்த்தமாக பாவநாசச் சுனையும் தலவிருட்சமாக கல்லால மரமும் அமைந்துள்ளன.
இவ்வாலயம் என்று தோன்றியது என்பது இதுவரை துல்லியமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. கிறிஸ்துவுக்கு முன் 1300ம் ஆண்டளவில் இலங்கையை ஆண்ட மனுமாணிக்கராஜா என்ற மன்னனால் இவ்வாலயம் தாபிக்கப்பட்டதாக அறிஞர் ஒருவர் கூறுகிறார். இராமாயணத்தில் வரும் பாத்திரமான இராவணனுக்கும் இவ்வாலயத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாகக் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருக்கோணேஸ்வரத் திருப்பதிகத்திலும் இவ்வாலயத்துக்கும் இராவணனுக்கும் உள்ள தொடர்பு காட்டப்பட்டிருக்கிறது. இராமாயணக் காலம் கிறிஸ்துவுக்கு முன் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதென்பர் அறிஞர். கிறிஸ்துவுக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய வாயுபுராணத்தில் திருக்கோணேஸ்வரம் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக மற்றுமோர் அறிஞர் குறிப்பிடுகிறார்.
கவிஇராஜவரோதயரின் பாடலின்படி திருக்கோணேஸ்வரம் கி.மு. 1589ல் தோற்றம்பெற்றதாக அறியமுடிகிறது. கொட்ரிங்டன் என்பாரின் கருத்துப்படி ஆலயம் கி.மு. 2590ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிங்கள வாலாற்று ஆசிரியர் பி.ஈ. பிரீஸ் என்பவர் திருக்கோணேஸ்வரம் விஜயனின் வருகைக்கு (கி.மு. 483) முன்னமே தோற்றம் பெற்றது என்கிறார். கடல்சூழ் இலங்கை கயவாகு என்று சிறப்பாகப் பேசப்படுகின்ற கயவாகு வேந்தன் இத்திருத்தலத்துக்குப் பல நிபந்தங்களை ஏற்படுத்தி மேலும் சிறப்பம் வசதியும் சேர்த்தான் என அறியமுடிகிறது. இவனின் ஆட்சிகாலம் கி.பி. 114 தொடக்கம் 134 வரையிலானது என்கின்றனர் வாலாற்று அறிஞர்கள்
இலங்கை வேந்தனாக இருந்த மகாசேனன் என்பான் தான் தழுவிய மகாயான பௌத்தத்தைப் பரப்புவதற்கு இடைய10றாக இருந்த ஆலயங்களை அழித்தபோது அவற்றுடன் ஒன்றாக திருக்கோணேஸ்வரமும் அழிக்கப்பட்டதாக மகாவம்சத்தின் உரைநூலான வம்சத்தப்பகாசினி தெரிவிக்கிறது. இது கி.பி. 302ல் நிகழ்ந்ததென்பர் வரலாற்று அறிஞர். எனினும் ஆலயம் சைவ மக்களால் வெகுவிரைவாக மீளவும் கட்டியெமுப்பப்பட்டது.
எவ்வாறாயினும் திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில் திருக்கோணேஸ்வரத்தின் கீர்த்தி இலங்கைத் தீவுக்கும் அப்பால் பரவியிருந்ததென்பது உறுதியான வரலாறு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இராமேஸ்வரத்தில் இருந்தபடியே திருக்கோணமலைப் பதிகத்தைப் பாடியருளியுள்ளார். வடகைலையில் இறைவன் அமர்ந்திருக்கிறார் என்ற சைவ சமய கொள்கையின் பிரகாரம் வட கைலைக்கீடாக தென்கைலை எனப்படும் திருக்கோணேஸ்வரத்திலும் இறைவன் அமர்ந்திருக்கிறார் என்பதை வலியுறுத்தித் திருக்கோணமலைத் திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாட முடிவிலும் ‘கோணமா மலையமர்ந் தாரே’ என்று திருஞானசம்பந்தர் பாடியருளினார். அவரால் பாடப்பெற்ற எவ்வாலயத் திருப்பதிகத்திலம் ‘அமர்ந்தாரே’ எனுஞ்சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
பிற்காலத்தில் திருக்கோணேஸ்வரம் குளக்கோட்டு மன்னனால் புதுப்பிக்கப்பட்டு சிறப்பொடு ப10சைகள் நடைபெறுவதற்கு மேலும் வசதிகள் அளிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கி.பி. 1215 தொடக்கம் 1255 வரையிலான 40 ஆண்டு காலம் இம்மன்னனின் ஆட்சி நிலவியதென்பர்.
இத்தகைய புகழ் வாய்ந்த ஆலயம் போத்துகீசரின் வருகையின் பின்னர் மதவெறி காரணமாக இடித்தழிக்கப்பட்டது. போத்துகீசத் தளபதியாக இருந்த கொன்ஸ்ரன்டைன் டீ ஸா என்பான் 1627 சித்திரை 14ந் திகதி இவ்வாலயத்தை துவம்சம் செய்தான். அழிக்கப்பட்;ட ஆலயத்தின் கற்களைக் கொண்டே பிரடரிக் கோட்டை கட்டப்பட்டதென்பர் வரலாற்றறிஞர். சிவவழிபாடு மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த சைவ அடியார்கள் இக்கோயில் விக்கிரகங்களில் ஒன்றைக்; கொண்டு தம்பலகாமம் எனும் இடத்தில் 1657ம் ஆண்டளவில் ஓர் ஆலயம் தாபித்து தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் வழிபடலாயினர். ஏனைய விக்கிரகங்கள் போர்த்துக்கீசரின் வசம் சிக்காதவாறு சிவனடியார்கள் மறைத்து வைத்திருந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது வழிபாடியற்ற அனுமதிக்கப்பட்டதால் மலையுச்சியிலிருந்த தலவிருட்சகமான கல்லால மரத்தைப் பக்தர்கள் ப10சித்து வந்தார்கள். ஆலயம் மீளவும் அமைக்கப்படாத நிலையில் வரலாற்றுக்கெட்டாத காலந்தொட்டு கற்பாறையில் முளைத்துக் குறிப்பிட்ட வளர்ச்சிக்கு மேல் உயராத தலவிருட்ச வழிபாடும் அதனூடாக கடலுக்குச் செய்யும் வழிபாடுமே பக்தர்களுக்குப் பற்றுக்கோடாக அமைந்திருந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரித்தானியப் படையினரால் குறிப்பிட்டளவு பக்தர்களே வழிபாடுசெய்ய அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
இலங்கை சுதந்திரமடைந்தபின் திருக்கோணேஸ்வரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டும் என்ற எண்ணம் சைவ அடியார்களிடம் துளிர்விட்டது. இதன் பயனாக சுவாமிமலை அடிவாரத்தில் முதலியார் கார்த்திகேசு அவர்களால் அமைக்கப்பட்டிருந்த மடத்தில் திரு. கே.வி ரங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் ஒன்றுகூடிய சைவமக்களிற் சிலர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யவேண்டும் என்ற சீரியநோக்குடன் 09.07.1950 அன்று திரு. து. இராசரத்தினம் தலைமையில் தற்காலிகச்சபை ஒன்றை நிறுவினர். பின்னர் இதுதொடர்பாக பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிதற்கும் ஒத்துழைப்புப் பெறுதற்குமான பெரிய கூட்டமொன்று திரு. து. இராசரத்தினம் அவர்கள் தலைமையில் 15.08.1950 அன்று திருக்கோணமலை இந்துக்கல்லூரி மன்டபத்தில் கூட்டப்பட்டு தற்காலிகசபையே புனருத்தாரணசபையாக ஏகமனதாக அங்கீகாரம் பெற்றது.
இறைவன் திருவருளால் நகராண்மைக்கழக ஊழியர்கள் வீரநகர் என்ற இடத்தில் கிணறு வெட்ட முற்பட்டபோது முந்றூறு வருடங்களுக்கு மேலாக மறைந்திருந்த மூன்று திருவுருவங்கள் வெளிவந்தன. இவற்றைக் கண்டு மகிழ்ந்த அடியார்கள் இவ்விக்கிரகங்களை நகராண்மைக் கழகத்திலேயே வைத்து ப10சித்தனர். அத்துடன் ஏற்கனவே சைவ அடியார்கள் வசமிருந்த இரண்டு விக்கிரகங்களையும் சேர்த்து திரு. சு. சிவபாலன் அவர்களால் அவை கொழும்பு புதைபொருள் ஆராய்ச்;சி அலுவலகத்திற் சேர்க்கப்பட்டு சிலமாதங்களின்பின் அவ்விக்கிரகங்கள் சிறப்புடன் புதைபொருள் ஆராய்ச்சி அலுவலகத்தாரால் புனருத்தாரண சபையிடம் ஒப்படைக்கப்பட அவை கார்த்திகேசு முதலியாரின் மடத்தில் வைத்து பசிக்கப்படலாயின.
பின்னர் 1952 முற்பகுதியில் இத்திருவுருவங்கள் இலங்கை முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆலயக்கட்டட நிதிக்காக அன்பர்கள் நிதியுதவி வழங்கினர். திரு. சீவரெத்தினம் எனும் அடியார் முதல் வேலையைத் தன்பணத்தைச் செலவிட்டுத் தொடக்கி வைத்தார். திரு. சிவபாலன்ää திரு. இ. முருகுப்பிள்ளை ஆகியோர் கரிசனையுடன் முன்னின்று புனருத்தாரண சபையின் உதவியுடன் அன்பர்களின் நிதியைக் கொண்டு ஆலயம் அமைத்து 1952 பெப்ரவரி 23ந் திகதி விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்து வழிபாடியற்ற வழிகோலினர்.
திரு. து. இராசரத்தினம் அவர்கள் மறைவைத் தொடர்ந்து திரு. சு. ம. மாணிக்கராசா தலைமையில் இயங்கிய பரிபாலனசபை அவர் பின் வைத்திய கலாநிதி சு. சித்திரவேலுவின் தலைமையிலும் அவர் மறைவை அடுத்து சட்டத்தரணி மு.கோ. செல்வராசா தலைமையிலும் பின்னர் திரு. ப. பரமேஸ்வரன் தலைமையிலும் தற்போது திரு .அருள்.சுப்பிரமணியம் தலைமையிலும் இயங்கிவருகிறது. சைவ அடியார்களினதும் பரிபாலன சபையினர்களினதும் சிவத் தொண்டு காரணமாக முந்தைப்பெருமைக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் ஆலயம் பொலிவுடன் காட்சியளிக்கிறது. பல்துறைச் சமூகசேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வரும் பரிபாலனசபை மேலும் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தவும் தற்போது செயற்பட்டுவரும் சேவைகள் தொடர்ந்த நடைபெறவும் சைவஅன்பர்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறது.
உதவியநூல்கள்
1. இந்துசமயம்.
2. ஈழத்துச் சிவாலயங்கள.; திருக்கேதீச்சரம் ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள், தொண்டர்சபை வெளியீடு.
3. வரலாற்றுத் திருகோணமலைää கனகசபாபதி சரவணபவன்.
4. திருக்கோணேசர் ஆலய கும்பாபிN~க மலர்ää (03.04.1963) வெளியீடு கோணேச ஆலய புனருத்தாரண கும்பாபிN~க சபையார்.

கருத்துகள்
கருத்துரையிடுக