தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4
உயிரீற்று நிலைமொழியுடன் உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி
இணைதல்.
நிலைமொழியின் ஈற்றெழுத்து அ> ஆ> உ> ஊ> ஒ> ஓ ஓள ஆகிய ஏழு உயிரோசைகளில் எதனையேனும் கொண்டிருக்குமாயின் வருமொழி
உயிரெழுத்திற் தொடங்குமிடத்து ‘வ’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றி இருமொழிகளையும் இணைக்கும்.
தகதக + என =
தகதகவென.
பல + அணி =
பலவணி.
விழா +
ஆரம்பம் = விழாவாரம்பம்.
நிலா +அழகு = நிலாவழகு.
குபுகுபு + என்று
= குபுகுபுவென்று.
திரு + ஓடு
= திருவோடு.
பூ + ஆரம்
= பூவாரம்.
கூ + என்றான்
= கூவென்றான்.
நொ +அழகு = நொவ்வழகு.
போ+ என்றாள் = போவென்றாள்.
நோ + எல்லாம் =
நோவெல்லாம்.
கௌ +அழகு =
கௌவ்வழகு
.
இ> ஈ >I ஆகிய மூன்று உயிரோசைகளில் எதுவேனும்
நிலைமொழியின் ஈற்றோசையாக வருமிடத்து உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணையும்போது ‘ய’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றும்.
பசி + இன்மை =
பசியின்மை
நடுநிசி + ஆனது =
நடுநிசியானது.
தீ + அணைந்தது =
தீயணைந்தது.
நீ + அல்லன் = நீயல்லன்.
புகை +இலை = புகையிலை
கலை + உள்ளம் = கலையுள்ளம்.
ஏகாரத்தில் முடிவுறும் சொற்களையடுத்து உயிரோசைச் சொற்கள்
இணையுமாயினும் உடம்படு மெய்யாக யகரமே தோன்றும்
.
அவனே + அவன் =
அவனேயவன்
அதுவே+ ஆயிற்று = அதுவேயாயிற்று
பகலே + இருண்டது = பகலேயிருண்டது.
இரக்கமே + இல்லான் = இரக்கமேயில்லான்.
கோ + இல் = கோயில் என்றும் கோவில் என்றும் இணைவதை இலக்கணம்
ஏற்கிறது
கோயில் என இணையும்போது ‘ய’ கரம் உடம்படு மெய்யாகவும், கோவில் எனவிணையும்போது ‘வ’ கரம் உடம்படு மெய்யாகவும் தோன்றுகின்றன என்பதையும்
கருத்திற் கொள்க.
நெடிற்றொடர்க் குற்றியலுகரத்துடன் உருபு புணர்தல்.
நெடிற்றொடர்க் குற்றியலுகரத்துடன் வேற்றுமையுருபு
புணருமிடத்து ‘இன்;’ சாரியை தோன்றாது.
நாடு + ஐ = நாட்டை
காடு + கு = காட்டுக்கு
வீடு + ஓடு =
வீட்டோடு
இவற்றை முறையே நாட்டினை> காட்டிற்கு> வீட்டினோடு என எழுதுவது
தவறு.
டு> று ஆகியவற்றை ஈற்றெழுத்தாகக்
கொண்ட நெடிற்றொடர் குற்றியலுகரத்துடன் வருமொழி புணர்தல்.
நெடிற்றொடர்க் குற்றியலுகரத்தின் இறுதியில் டு> று என்பவை வருமாயின் அவ்வெழுத்து இரட்டித்து இடையில் அதன் மெய் தோன்றும்.
வருமொழி வல்லினத்திற் தொடங்குமாயின் வல்லினம் மிகும்.
காடு + பாதை = காட்டுப்பாதை (டகரத்தின் மெய் தோன்றியது. வருமொழி வல்லினம்
மிகந்தது.)
சேறு + நிலம் = சேற்றுநிலம்
சேறு + பாதை = சேற்றுப்பாதை
ஆறு + மணல்
=ஆற்றுமணல்
ஆறு + பகுதி
=ஆற்றுப்பகுதி
குற்றியலுகரத்தையடுத்து வருமொழி ‘ய’கரத்திற் தொடங்குமாயின் குற்றியலுகரத்தின் இறுதிஎழுத்து ;இ’கரவோசை பெறும்
.
நாடு +யாது? =
நாடியாது?
பட்டு + யாது? =
பட்டியாது?
படகு + யாது? =
படகியாது
முற்றியலுகரம் சிலவற்றுக்கும் இவ்விதி பொருந்தும்.
கதவு + யாது? =
கதவியாது?
மகவு +யாரோ =
மகவியாரோ?
ஒரு + யானை =
ஓரியானை (ஒரு என்பது ஓர் எனத் திரிந்து
இகரம் தோன்றிது. எனினும் ஒருயானை
என்றே தற்காலத்தில் எழுதப்படுகிறது.)
குற்றியலுகரத்தினையடுத்து வருமொழி உயிரோசையிற்
தோன்றுமிடத்து நிலைமொழியின் உகரம் விலகி வருமொழியின் உயிரேறும்
.
காடு + இல்லை = காடில்லை
படகு + ஆடியது =
படகாடியது
அழகு + அமைந்தது = அழகமைந்தது.
கொக்கு + ஓடுகிறது = கொக்கோடுகிறது.
ஐகார ஒலியில் நிறைவுறும் பண்புப் பெயர்கள் புணர்தல்.
பொதுவாகப் பண்புப்பெயர்கள் நிலைமொழியாகிப் புணரும்போது அதன்
ஈறு (மை) கெட்டு வருமொழியுடன் இணையும்.
கூர்மை + வேல் = கூர்வேல்.
நன்மை + மனம் =
நன்மனம்.
நுண்மை + அறிவு = நுண்ணறிவு
புதுமை + மணம் =
புதுமணம்
சிறுமை + மதி =
சிறுமதி.
இனிமை + சொல் =
இன்சொல்
நிலைமொழியின் ஈற்றெழுத்துக் கெட்டு முதலெழுத்து நெடிலாதல்
.
முதுமை + உரை
= மூதுரை
முதுமை + ஊர் =
மூதூர்
பெருமை + ஆற்றல்
= பேராற்றல்
நிலைமொழியின் ஈறுகெட்டு முதலெழுத்து ஐகாரமாகத் திரிபடைதல்.
பசுமை + தமிழ் = பைந்தமிழ்
பசுமை + கிளி =
பைங்கிளி
நிலைமொழியின் ஈறு கெடலும் மெய்யெழுத்துத் திரிபடைதலும்
.
செம்மை + தேன் =
செந்தேன்.
வெம்மை + நீர் =
வெந்நீர்
நன்மை + செயல் =
நற்செயல்
நிலைமொழியின இறுதி ஐகாரம் விலகி அதன் மெய்யெழுத்தாகவோ
அல்லது நிலைமொழியின்; இனவெழுத்தாகவோ மாற்றமடைதல்.
அருமை + தவம் = அருந்தவம்.
பசுமை + பால் =
பசும்பால்
பசுமை + தளிர் =
பசுந்தளிர்
அருமை + புகழ் = அரும்புகழ்.
திசைப்பெயர்கள் புணரும்போது வடக்கு> தெற்கு என்பவையே நிலைமொழியாக அமைவது வழக்கு.
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு.
வடக்கு + மேற்கு = வடமேற்கு
தெற்கு + கிழக்கு =
தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
வடக்கு + திசை =
வடதிசை
தெற்கு + திசை= தென்றிசை
கிழக்கு + திசை =
கீழ்த்திசை
மேற்கு + திசை = மேற்றிசை
வடக்கு + நாடு = வடநாடு
தெற்கு + நாடு = தென்னாடு
கிழக்கு + நாடு = கீழ்நாடு
மேற்கு + நாடு =
மேனாடு
வடக்கு + தேசம் =
வடதேசம்
தெற்கு + தேசம் = தென்றேசம்
கிழக்கு + தேசம் = கீழைத்தேசம்
மேற்கு + தேசம் =
மேற்றேசம் = மேலைத்தேசம்.
வடசொற்கள் புணர்தல்.
(நன்றி: அறிஞர் அக்னிபுத்திரன்)
தமிழில் வழங்கும் வடசொற்கள் தம்முள் புணரும்போது தீர்க்கசந்தி, குணசந்தி, விருத்திசந்தி என
மூன்றுவகையாகப் புணர்கின்றன.
தீர்க்கசந்தி.
நிலைமொழி ஈறு அ>
ஆவிலும் வருமொழி
தொடக்கம் அ> ஆவிலும் அமையினும்>
நிலைமொழி ஈறு இ>
ஈயில் அமைந்து
வருமொழி இ> ஈயில் தொடங்குமாயினும்>
நிலைமொழி ஈறு உ>
ஊவிலும் வருமொழி
முதலெழுத்து உ> ஊவில் இருப்பினும்> அவ்வவ் எழுத்துச் சார்ந்த
நெட்டெழுத்துத் தோன்றி இணையும். இது தீர்க்கசந்தி எனப்படுகிறது.
பாத + அரவிந்தம் =
பாதாரவிந்தம்
கணேச +ஆலயம் =
கணேசாலயம்
துவஜ + ஆரோகணம் = துவஜாரோகணம்.
கிரி + ஈசன் = கிரீசன்
மகீ + இந்திரன் =
மகீந்திரன்
குரு + உபதேசம் = குரூபதேசம்
குணசந்தி.
அ> ஆ முன் இ. ஈ வரின் இரண்டும் கெட ஏகாரம் தோன்றும்.
நர + இந்திரன் = நரேந்திரன்
மகா+ ஈசன் = மகேசன்
அ, ஆ முன் உ> ஊ வரின் இரண்டும்கெட ஓகாரம் தோன்றும்.
அமல + உற்பவம் = அமலோற்பவம்
சூர்ய + உதயம் = சூர்யோதயம்.
மந்திர + உச்சாடனம் = மந்திரோச்சாடனம்
மகா + ஓளதாரியம் = மகௌதாரியம்
விருத்தசந்தி.
அ> ஆ முன் எ> ஏ வரின் இரண்டும் கெட்டு
ஐகாரம் தோன்றும்.
அ> ஆ முன் உ> ஊ வரின் ஒள காரம் தோன்றும்.
லோக + ஏகநாயகன் = லோகைகநாயகன்
மகா +ஐசுவரியம் = மகைசுவரியம்
கலச + ஓதனம் =கலசௌதனம்
மகா + ஓளதாரியம் = மகௌதாரியம்
Sirappu
பதிலளிநீக்கு