தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09
பதவியல் இயல் 2 பகுதி 9 ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் கருத்துப் புலப்படுமாறும் அமைந்திருக்கின்ற இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட கூட்டே தொடர்மொழி எனப்படுகின்றது. தொடர்மொழியானது தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படுகின்றது. தொகைநிலைத் தொடர்: தொகைநிலைத் தொடர் என்பது உருபுகள் வெளிப்படாமல் மறைந்து நிற்கின்ற நிலையில், இரண்டு அல்லது அவற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து இலக்கணரீதியாகப் பொருள் தருவது எனலாம். தொகை என்றால் தொக்கிநிற்கிறது அல்லது மறைந்து நிற்கிறது என்று பொருள். இத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என அறுவகைப்படுகின்றது. 1. வேற்றுமைத்தொகை: வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்துநின்று பொருள் தருகின்றபோது அது வேற்றுமைத்தொகை எனப்படுகிறது. வேற்றுமைகள் எட்டு என்கிறது இலக்கணம். இவற்றுள் முதல்வேற்றுமையும் எட்டாம்வேற்றுமையாகிய விளிவேற்றுமையும் உருபுகள் அற்றன. அதாவது எந்த உருபுகளையும் தம்முடன் இணைத்து மொழிநடையில் ...
கருத்துகள்
கருத்துரையிடுக