தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4
உயிரீற்று நிலைமொழியுடன் உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணைதல். நிலைமொழியின் ஈற்றெழுத்து அ > ஆ > உ > ஊ > ஒ > ஓ ஓள ஆகிய ஏழு உயிரோசைகளில் எதனையேனும் கொண்டிருக்குமாயின் வருமொழி உயிரெழுத்திற் தொடங்குமிடத்து ‘ வ ’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றி இருமொழிகளையும் இணைக்கும். தகதக + என = தகதகவென. பல + அணி = பலவணி. விழா + ஆரம்பம் = விழாவாரம்பம். நிலா +அழகு = நிலாவழகு. குபுகுபு + என்று = குபுகுபுவென்று. திரு + ஓடு = திருவோடு. பூ + ஆரம் = பூவாரம். கூ + என்றான் = கூவென்றான். நொ +அழகு = நொவ்வழகு. போ+ என்றாள் ...
கருத்துகள்
கருத்துரையிடுக