ஏதிலியாய் நாங்கள்…

ஏதிலியாய் நாங்கள்…


இப்படித்தான் ஏதிலியாய் ஒருநாளிற் போனோம்
எப்படித்தான் பிழைத்தோமோ நினைக்கமனம் வேகும்
தப்பிவந்தோர் கூறுங்கதை தரணிகாணாச் சோகம்
எப்புறமும் துயரென்றால் எங்குநெஞ்சம் ஆறும்
கணத்துக்குக் கணம்நிலை மாறிச்சீ ரழிக்கும்
நினைத்தாலே இப்போதும் தேகம்பட படக்கும்
தோள்சுமந்த உறவுகள் துடிதுடித்து மாண்டார்
தோளிருந்த குழந்தைகளும் துயர்க்கடலில் ஆழ்ந்தார்
நம்பிக்கை ஒன்றேதான் நம்வாழ்வின் ஆதாரம்
வெம்புதுயர் வீழ்ந்தழியும் விடிகாலம் உருவாகும்.


கந்தவனம் கோணேஸ்வரன்.

23.05.2020

கருத்துகள்