தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 7
பதவியல் 7 தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரிசொல். வடசொல், திசைச்சொல் என நான்கு வகையாகவும் பிரிப்பர் அறிஞர். இயற்சொல். தமிழ்மொழி பேசுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆழமான முயற்சிகள் எதுவுமின்றிப் பாமரனும் படித்தவனும் இயற்சொற்களை விளங்கிக் கொள்ள இயலும். “நான் வந்தேன்.” “அவன் போனான்.” “அம்மா என்னை அழைத்தார்.” போன்ற வசனங்களில் வருகின்ற சொற்கள் அனைத்தும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கனவாக அமைந்தள்ளன. எனவே இவை இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆடு, மாடு, கோழி, தம்பி, அண்ணா, வானம், பூமி, காற்று ஆகிய பெயர்ச்சொற்களும், வா, நின்றான், படிப்பாள், சாப்பிடு, ஓடு, நட போன்ற வினைச்சொற்களும் இவ்வகையைச் சார்ந்தன. பயன்படுத்தப்படும் இடங்களில் சொல்லவந்த கருத்தை மயக்கமின்றித் தெளிவாகச் சொல்கின்ற தன்மை இயற்சொற்களுக்கு உண்டு. திரிசொல். சாதாரண மக்களன்றிக் கல்வி அறிவுடைய மக்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய தமிழ்ச்சொற்கள் திரிசொல் எனும் பிரிவுக்குள் வருகின்றன. “பேசினான்.” எனும் இயற்சொல்லை “நவின்றான், பகன்ற...